உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

என் தமிழே-2143 ஜெயா நடேசன்

என் தமிழே-2143 ஜெயா நடேசன்

அமுது என்பார் இனிமை என்பார் ஆழ்கடல் அழகிய முத்து என்பார் தேன் மொழி செம்மொழி என்பார் தெவிட்டாத சுவை பெற்றது என்பார் அன்னை சொல்லித் தந்த மொழி ஆராரோ பாட்டில் கேட்ட மொழி சங்கே முழங்கும் ஒலித்த மொழி சங்கம் வளர்த்த இலக்கிய மொழி அன்பை போதிக்கும் அருமை மொழி இன்பம் தரும் ஆறுதல் மொழி துன்பம் போக்கும் துடிப்பு மொழி அழியா வரம் பெற்ற ஆயுள் மொழி அதுதான் எங்களின் உயிர் மொழி