உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" பூத்துவிட்டாள் காலமகள் "

" பூத்துவிட்டாள் காலமகள் "

ரஜனி அன்ரன் (B.A) " பூத்துவிட்டாள் காலமகள்" 08.01.2026 காலத்தின் சுழற்சிமாற்றம் காலமகளின் கொடை காலம் தந்தபரிசு புத்தாண்டு கடந்தகாலத் தவறுகளைத் திருத்தி முடிந்துபோன பக்கங்களை விலக்கி முனைப்போடு தொடங்கும் வாழ்வினை முத்தாப்பாய் நகர்த்த மலர்ந்து விட்டாள் காலமகள் ! பூக்கள் மட்டுமல்ல பூத்துவிட்டாள் காலமகளும் பாக்கள் எங்கும் இசைக்கட்டும் புதியதொடக்கம் மெளனமாய் பிறக்கட்டும் மனங்கள் சிறக்கட்டும் மனிதநேயமும் மலரட்டும் ! புன்னகை மணம்வீச புத்தூக்கம் சிறக்க கன்னல் மொழியாளும் கதைகூற மின்னல் வேகமாய் எழுச்சிகளும் தொடர வாழ்க்கையெனும் தோட்டத்தில் வெற்றிமலர்கள் சிரிக்கட்டும் புதிய நம்பிக்கை ஒளியில் பூத்துவிட்டாள் காலமகள் புலர்ந்து விட்டது வாழ்வும் ! https://www.youtube.com/watch?v=vggdm7C9PFQ