உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" தமிழின் ஞாயிறு "

" தமிழின் ஞாயிறு "

ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025 நல்லூர்தந்த ஞானச்சுடர் தமிழின் ஞாயிறு தமிழ் வளர்த்த சான்றோன் வல்லதமிழை வளமான சைவத்தை புராணஆகமத்தை புத்துயிராக்கிய சான்றோன் மார்கழித் திங்கள் பதினெட்டில் மாண்புடனே உதித்தாரே மகான் நாவலர் ! ஏட்டுச்சுவடிகளை எல்லாம் தூசுதட்டி பாட்டாக அச்சேற்றிப் பயன்தந்த பாவலன் சைவமும் தமிழும் தளைக்கச்செய்து நாட்டுமக்களின் நல்வாழ்விற்கும் நன்னெறிக்கும் வித்திட்ட பெருமகன் பாமரரும் விளங்கும் எளியநடையில் பாருக்கு புதுநெறி படைத்த பாவலன் ! மொழியின் வளர்ச்சிக்கும் சமய எழுச்சிக்கும் விழியாகிநின்று ஒளிகொடுத்த வித்தகனை அழிந்து போகவிருந்த ஓலைச்சுவடிகளை அச்சுருவாக்கி அரும்பெரும் நூல்களையெல்லாம் ஆக்கியஆசானை அனுதினமும் போற்றிடுவோம் ! https://www.youtube.com/watch?v=gpEFCV4Z6sQ