உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவலைகள்

கவலைகள்

கவிதை 801 மெல்ல மெல்ல மனதின் சுவர்களை உப்புறமாக சுரண்டும் மௌன சிராய்ப்புகள் கேட்கப்படாத கேள்விகள் சொல்லப்படாத பதில்கள் என்ன ஆகுமோ என்ற வாக்கியம் அடுக்கடுக்காக கவலைகளாக உள்ளத்தில் குடியேறும் நினைவுகளின் சாலையில் திரும்பத் திரும்ப முன்னும் பின்னும் நடக்க வைக்கும் தூக்கம் கண் கதவை தட்டும் எண்ணங்கள் உள்ளே பூட்டிக்கொண்டு விழித்திருக்கும் ஒரு மனம் புன்னகைத்து மகிழ்கின்றது மற்றொன்று கவலைகளுள் சிக்கித் தவிக்கின்றது மனம் மெதுவாக கற்றுக்கொள்ள பழக்கட்டுமின்று கவலைகள் வாழ்க்கையின் முகவரி அல்லவென்று ஜெயம் 18-12-2025