உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைவுகள் கனக்கிறதே

நினைவுகள் கனக்கிறதே

ரஜனி அன்ரன் ( B.A) "நினைவுகள் கனக்கிறதே" 27.11.2025 தலைகுனிந்த எம்மினத்தை தலைநிமிரச் செய்து தன்மானத்தோடு நாம்வாழ தம்முயிரை ஈகம்செய்த தேசமறவர்களின் தியாகநினைவுகள் நெஞ்சோடு கனக்கிறதே நினைவுகளும் மலர்கிறதே ! தமிழ்வாழ இனம்வாழ தம்முயிரைக் கொடையாக்கி உடலை வெடியாக்கி உணர்வைப் பொறியாக்கி வித்தாகிப் போனவரின்ஒலி மண்ணின்மார்பில் வலியாகத் துடிக்கிறதே விண்கூட மழைப்பூவைச் சொரிகிறதே கண்களில்நீரும் பனிக்கிறதே ! காற்றிலும் சேற்றிலும் கடுங்குளிரிலும் ஊற்றாகிப் போனவரின் உயிர்த்தியாகம் இனத்தின்அரணாக இன்னும் உயிர்ப்போடுதான் மண்ணில் விழுந்த உம்வேர்கள் மரபாக உயர்கிறது நாளைஎழும் தலைமுறைக்கும் அறமாக உரைக்குமே எல்லைகள் கடந்தும் எம்உணர்வோடு கலந்துவிட்ட உன்னதர்களின் நினைவுகள் கனக்கிறதே மனசெல்லாம் ! https://www.youtube.com/watch?v=n08FEk3oAF4