உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாவீரச் செல்வங்களே 77

மாவீரச் செல்வங்களே 77

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 20-11-2025 மண்ணிற்காய் மரணித்த மாவீரச் செல்வங்களே! கார்த்திகை பிறந்தாலே கனக்குது மனங்களும் வலியின் வடுக்களும் வேதனையாய் புரளுதே கடைசி நிமிடத்தில் களம் ஆடுகையில் மனதில் தோன்றியதேதுனக்கு மண்ணா? மனையாளா? பெற்றவரா? பேரர்களா? கூடவே பிறந்தவரா கூடித் திரிந்தவரா? குமுறி அழுதாயா? சொல்ல ஏதும் நினைத்தாயா? சொல் இழந்து தவித்தாயா? யாது துணிவு உனக்கு? செந்தமிழ் ஈழத்திலே செங்களமாடிய மாவீரச் செல்வங்களே கனவுகள் பலிக்கட்டும் காலம் கடந்தாலும் ஜெயிக்கட்டும் செங்காந்தாள் மலரெடுத்து தொழுது நாமும் மண்டியிடுவோம்.