உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மௌனத்தின் மொழி 74

மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல் வார்த்தைகளை சுமந்து துடிக்கும் சகபணித் தோழியே! வேற்று மொழி பேசினாலும் வேடம் அற்ற நேசிப்பினால் பல கதைகள் பேசினோம் பாசத்தை பரிமாறினோம். பணிஓய்வு காலம் உனை அணுக பக்கவாதம் அணிந்ததுவே மிக்க துயர் நெஞ்சடைக்க மௌனமொழியை வரைகிறேன். உன் ஓசைகள் இழந்தாலும் எண்ணங்கள் புரிகிறது ஆசைகள் நிறைவேற ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.