உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இயற்கை வரமே இதுவும் கொடையை...

இயற்கை வரமே இதுவும் கொடையை...

கவிதை: 24 விண்ணவன் - குமுழமுனை இயற்கை வரமே இதுவும் கொடையை.... *~***~* பல எதிர் பார்ப்புகளின் மத்தியிலே பல வேலைகள் மனிதனால் செய்யப்படினுமே எவ்வித எதிர்பார்ப்புமின்றி மனிதனின் வாழ்க்கைக்காக பணியாற்றி வருகிறதே இவ் இயற்கை யுகங்கள் இத்தனை கடந்துமே தன் பணியில் எவ்வித குறையுமின்றியே அன்று முதல் இன்றுவரை பணியாற்றி வருகிறதே நாமோ இயற்கையை நம் சுய நலத்திற்காக அழிக்கிறோம் ஆனால் இயற்கையோ நம்மேல் எவ்வித கோபமும் கொள்ளாது நம்மை இன்றைவரையுமே பாதுகாத்து வருகிறதே இவ் இயற்கைக்கு என்றும் கடன் பட்டவர்களாய் வாழ்வோமே... *~***~* விண்ணவன் - குமுழமுனை