உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025 உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க உருகஉருக உருக்கியது தன்னைத்தானே உணர்த்தியது அறப்போரை ஊரெழுவின் மெழுகுவர்த்தி உடலும் மருத்துவத்திற்கு உணர்வும் தமிழுக்குமென உரமாக்கியதே உயிரினைத் தமிழ்வேருக்கு ! வேருக்கு உரமாகி வேட்கையின் குறியாகி அறவழிநின்று அகிம்சை கொண்டு ஆன்மபலத்தில் உலகை வென்று இனத்தின் துயரைத் துடைக்கவென்று மனத்தை இறுக்கி உயிரையே ஈந்த உணவினை வெறுத்த உன் உயிர்த்தீபம் உணர்வாக எம்நெஞ்சில் சுடரானதே ! சுடரொளி நீதான் சுவடும்நீதான் தமிழ்வேருக்கு உரமான தியாகியும் நீதான் நல்லூரான் வீதியிலே நடந்த வேள்வியில் ஊரெழுவின் மெழுகுவர்த்தி ஊரறிய உலகறிய தீப்பொறியாச்சுதே ! https://www.youtube.com/watch?v=2c6cAwpzbDo