உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அன்பெனும் சொல்..

அன்பெனும் சொல்..

வியாழன் கவி-2206!! அன்பெனும் ஒற்றைச்சொல்.. அளவில் சிறிதாய் அழகில் பெரிதாய் ஆதவன் ஒளியாய் அணைக்கும் வல்லமை..!! தாய்மைக்கு நிகரும் தன்னிகரற்ற சிறப்பும் தாழ்வில்லா உயர்வும் தாங்கிய பொறுமை..!! குழந்தை வடிவம் குறும்பின் உருவம் குணத்தில் குன்று குலமகள் அணைப்பு..!! பூக்களின் வண்ணம் புவனத்தின் எண்ணம் பூந்தமிழ் பாவினம் பூபாளம் அன்பே அன்றோ..!! சிவதர்சனி இராகவன் 11/9/2025