உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

தெரியாத வேர்கள்

தெரியாத வேர்கள்

ஜெயம் கவிதை 783 தெரியாத வேர்கள் மண்ணுக்குள்ளே புதைந்திருந்து மரத்தை வளர்க்கும் தாகம் மண்ணுக்கு மேலே விருட்சமது மறைந்திருக்கும் வேர்களின் தியாகம் கம்பீரமான காட்சியின் இருப்பாக மரம் அது சிதையாத மடியாத வேர்களின் வரம் கிளைகளில் கண்கவர் மலர்களின் தரிசனம் உழைப்பில் களைக்காத வேர்களின் கரிசனம் புயலும் மழையும் மரத்தை வீழ்த்தப்பார்க்கும் இயலுமட்டும் மரத்தை ஆணிவேரும் காக்கும் நீளும் ஓடும் பூமிக்குள்ளே வளங்களைச்சேர்க்க வாழும் மரத்தின் கிளையையும் இலையையும் காக்க சுவையான கனிகளை தாங்கிய கிளைகள் அவையாவும் கடமையால் உண்டான நிலைகள் உண்மையில் வேர்கள் கடவுளைப் போன்றவை எண்ணிப்பார்த்தால் கண்னெனக்காக்கும் பெற்றோராக அவை https://youtu.be/-gP9SbPN50E?si=0eFl2dSMUDqkz6Ho