உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வண்ண வண்ணப் பூக்கள்.....

வண்ண வண்ணப் பூக்கள்.....

ரஜனி அன்ரன் (B.A) “ வண்ண வண்ணப் பூக்கள் “ 03.07.2025 பூமித்தாயின் பூரிப்பில் பூக்களெல்லாம் வரங்களே பூமித்தாயை வனப்பாக்கி பூவையரையும் மகிழ்வாக்குமே ஆண்டவனுக்கு அர்ப்பணமாக அர்ச்சனை மலர்களாகி ஆராதிக்குமே தேனைத் தேடிவரும் தேனீக்கும் தினம்தினம் திருவிழா இங்கேதான் ! கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் வண்ண வண்ணப் பூக்கள் காலையில் மலர்வது அல்லிப்பூ கருக்கலில் முகிழ்ப்பது மல்லிகைப்பூ கதிரவன் வரவினில் தாமரைப்பூ காதலின் சின்னம் ரோஜாப்பூ ! செம்பவள நிறமாம் செம்பருத்தி செங்காந்தள் மலராம் எம்தேசீயப்பூ செம்மஞ்சள் வண்ணமாம் செவ்வந்தி கொத்தான பூவாம் சாமந்தி கெத்தான அதிசயப்பூவாம் குறிஞ்சி வாடும் பூவும் சொல்லும் வாழ்வின் அழகு நிறைவில்தானென்று ! https://www.youtube.com/watch?v=1t0LwrS5KsQ