உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பள்ளிப் பருவத்திலே...

பள்ளிப் பருவத்திலே...

ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே...... 22.05.2025 வாழ்வின் முதற்படி வரலாற்றுப் பதிவின் சரிதம் வாழ்வின் வரமான பள்ளிச்சாலை புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம் துயர் மறந்த தருணம் பாடம்படிப்பு விளையாட்டு நடனமென பவனி வந்தகாலம் இனிய பள்ளிப்பருவம் ! காலத்தைமுந்தி ஓடியகனவுகள் வெற்றியின் இலக்கினைத் தேடியநாட்கள் வெற்றிக்கான பயிற்சியின் காலமது புலரும் பொழுதினில் புன்னகைசிந்தி மலரும் நினைவுகள் அரும்பிய பருவம் மனதை நிறைத்த மகிழ்வின் பயணம் பள்ளியென்ற பொக்கிஷக்காலம் ! பன்னிரெண்டு ஆண்டுப் பயணம் கண்ணிரெண்டில் ஆடுதே இன்னும் நிழலாக படித்தபள்ளியில் எனைப்படிப்பித்த ஆசான்களோடு பாடம் படிப்பித்தகாலம் பொற்காலமே என்வாழ்வின் பொற்காலமே ! https://www.youtube.com/watch?v=Wo6C7uYdE6k