உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அறிவின் விருட்சம்

அறிவின் விருட்சம்

ரஜனி அன்ரன் (B.A) “ அறிவின் விருட்சம் “ 24.04.2025 புத்தகம் வெறும் காகிதமல்ல புத்தியைத் தீட்டிடும் ஆயுதம் ஆலமரத் தோப்பின் விருட்சம் அறிவுத்தாகம் தீர்க்கும் வற்றாத நதி இனிமை வாழ்விற்கு இட்டுச்சென்று தனிமையைப் போக்கிடும் தோழி புத்திமதி கூறிடும் புத்தகம் வித்தகமான அறிவுப் பொக்கிஷம் ! அறிவின் ஆழக்கடல் அறநெறி ஊற்று அறிவுக்குள் எமையேற்றி அழகுபார்க்கும் ராணி மெளனமே இதன் மொழி வார்த்தையின் கனதியோ இதன் இடி காலத்தையும் கடந்த ஒளிக்கீற்று காலவரலாற்றைக் கட்டியம்கூறும் ஞானி ஒவ்வொரு பக்கமும் ஒருஉலகம் ! மாற்றத்தைத் தூண்டும் மாயக்காரி ஆற்றலை அதிகரிக்கும் ஆர்வக்காரி அறிவின் விருட்சம் புத்தகமே ! https://www.youtube.com/watch?v=sJBsh9JU5W4