உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2129 மனமா அறிவா? அறிவாய் மனமே!! அதிகமாய்க் காயம் பட்டும் அதற்கே புரிவதில்லை இதுதான் விதியோ என்றால் இதற்கு விளக்கம் இல்லை இறப்பு மலிந்த மண்ணில் இதயத்திக்கு மதிப்பு இல்லை மனமோ அறிவோ என்றால் மயக்கம் அதிலும் உண்டாம்.. எத்தனை விளக்கம் இங்கே விளக்கியும் பயனோ இல்லை மனதுக்கு புரிந்த போதும் அறிவோ ஏற்பதும் இல்லை அறிவால் அறிந்த போதும் மனது சமாதானம் ஆவது இல்லை.. அறிவால் செயல் ஆற்றின் மயக்கம் இங்கே இல்லை அகத்தால் பார்க்கும் போது அறிவுக்கோ வேலை இல்லை எத்தனை சொல்லியும் கேளா மனதினுக்கு துயரே மிச்சம் இதுவும் கடந்தே போகும் இனி அதுவே மருந்தும் ஆகும்.. சிவதர்சனி இராகவன் 27/3/2025