உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிதை

கவிதை

இரா.விஜயகௌரி மொழிக்குள் விதை விதைத்து கருவுக்குள் உருவாகி கனிவாகி கதையல்ல காவியமே இதுவென்று தைத்த நொடி கவிதை பிறந்த கணம் சிந்தைக்குள் விழுந்த கரு சிதையாமல் மொழி இழைய கன கச்சிதமாய் நெய்த இழை முத்தெனவே முகிழ்ந்தசையும் கவிதை செழுமைக்குள் செதுக்கி எழும் மொழிமகளாள் அழகின் எழில் நெஞ்சத்தில் புகுந்தெழுந்து வானவில்லாய் விரிந்தசையும் பெருந்தெறிப்பே கவிதை ஆம் ஆய்ந்தறிந்துமொழிவதல்ல அகத்திலெழும் உணர்வசைய ஆங்கு சிதறி விழும் செந்தமிழின் துகள்களெல்லாம் காந்தமென கவர்ந்திழையும் பூஞ்சொரிவே கவிதை