உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

" வரமானதோ வயோதிபம் "

" வரமானதோ வயோதிபம் "

ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025 வாழ்க்கைப் பயணமதில் வயோதிபம் காலத்தின் கட்டாயம் அந்திம காலத்து அத்தியாயம் அன்பிற்காய் ஏங்கும் இதயம் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் வதனப் பொலிவின் வரிக்கோலம் வரமானதோ வாழ்வின் இறுதியில் வயோதிபமாக ! வெண்கம்பிக் கேசம் கதை சொல்ல விழிமடல்களில் குழியும் விழ கால் போகும் திசையில் நடந்து கால்கள் மூன்றாகி நடக்கையில் மனம் மட்டும் மரம்விட்டு மரம்தாவ வாழ்ந்த காலங்களின் இரைமீட்புக்காலம் வரமானதோ வயோதிபக் காலமதில் ! இளமைக்கால நினைவுகள் அலைமோத இறுமாப்புக்களும் வந்து நினைவூட்ட வாழ்ந்த வாழ்வு காட்சியாக வாரிசுகளும் வம்சத்தின் சாட்சியாக பேரன் பேத்தியரும் மாட்சிமையாக வரமானதே வாழ்வினை நிறைவாக்க வயோதிபமும் ! https://www.youtube.com/watch?v=y9d9XmSIM6Y