உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வரமானதோ வயோதிபம்

வரமானதோ வயோதிபம்

ராணி சம்பந்தர் ஈரமானதே இளமை அனுபவம் உரமானது இனிமைப் பதிவகம் பாரமான சோதனை வேதனை மறந்தே சாதனை படைத்ததில் துறக்கவே முடியாத ஞாபகமே எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே உற்சாக ஊக்கமும் உழுதிடவே பயமின்றிப் பெலம் கரமிணைய நல் விளைச்சல் பலன் தந்ததே விதிவசத்தால் பாரமான முதுமை உரு மாறியதில் பெருமூச்சானது கடித்துச் சுவைக்கப் பல் மறுக்க கண்ணிருந்தும் பார்வை மங்கிட தசை எலும்புகள் நலிவடைந்திட தீராத வலி பெருகிய கண்ணீரில் திருகிய வாலிபப் பருவம் மெருகிட மானிடர் வரமானதோ வயோதிபம்