உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிதையெனக் கிறுக்கினேன்(52)...

கவிதையெனக் கிறுக்கினேன்(52)...

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 13-03-2025 ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி தொலைந்து போன கனவுகள் பலவாகி தொக்கிநிற்கும் நினைவுகளும் மேலாகி ஆழ்மனது எண்ணமெல்லாம் கொட்டித்தீர்த்து அலைபாயும் அருவியாய் ஊற்றெடுக்க சிறுகதையும் நாடகமும் சிறகடிக்க சிறுகவிதையும் பட்டிமன்றமும் சிங்காரிக்க தளமொன்று தந்தவரை தலைவணங்கி தாழ்வுமினி வேண்டாமென அரங்கேறி எழுத்தாக புனைந்து அள்ளி எழுதித்தள்ளி கவிதையெனக் கிறுக்கினேன் தமிழேகேள்! தாய்மண்பற்று தரமாயுண்டு என்னிடமும் தமிழை ஆழ்ந்து படிக்காவிடினும் தமிழின் அழகில் மயங்கி நானும் தலையாய கடமையெனக் காப்பேன்..