உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம் ஒன்றே......

மாற்றம் ஒன்றே......

மாற்றம் ஒன்றே……கவி....ரஜனி அன்ரன் (B.A) 06.03.2025 மாற்றமென்பது இயற்கையின் நியதி நேற்றும் இன்றும் நாளையும் மாற்றம் காலம் செய்யும் மாயமே மாற்றம் ஞாலம் மீதில் எத்தனையோ மாற்றம் மனிதனும் மாறுவான் வாழ்க்கைப் பயணமதில் மாற்றம் ஒன்றே மாறியபடி ஏற்றம் காணும் இயல்பு இதுவே ! பட்டை தீட்டிய வைரமாக பாமுகப் பக்கமும் கண்டது மாற்றம் படக்கலவைகளும் பட்டொளி வீசிட புத்தம் புதிதாய் வடிவமைப்பு அத்தனை நிகழ்வும் மொத்தமாய் மாற்றம் அதிபரின் தொடுப்பும் அருணின் கைகொடுப்பும் அழகோவியமாய் காட்சி தருகுது ! வாழ்க்கை நதியின் ஓட்டத்தில் வருகின்ற மாற்றங்களும் இயல்பே மாற்றம் ஒன்றே ஏற்றம் காண மாற்றம் என்பது புதுமையே ! https://www.youtube.com/watch?v=jwL2hUwsM5o