உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம் ஒன்றே...

மாற்றம் ஒன்றே...

வசந்தா ஜெகதீசன் அகிலத் திரையாய் விரிகிறது ஆங்காங்கே மாற்றம் நிகழ்கிறது கடந்து போகும் பாதைகளும் பட்டறிவாய் பலதைச் செப்பிடவே பாரே மாற்றுத் திறனாகும் பயணவழிகள் பலவாகும்! பாமுகப்பணியின் விரிவாக்கம் பலநிகழ்வுகள் ஒன்றித்து சுடரேற்றும் காலத்தின் வலுவில் கரிசனையாய் காத்திடமிக்க படைப்புக்களை ஞாலத்தில் வேராய் ஊன்றிடுமே முதலொலி முதன்மையின் பேரேடு முற்றிலும் இலவச பதிவேடு தக்கதாய் பணிகளை ஆற்றியே தகமையில் ஏற்றிடும் தனித்துவமே சாலவும் சிறப்பாய் சான்றுரைத்து சாதனை பதிவாய் முதலொலி சேர்நிலை செதுக்கலில் செப்பனிட்டு வீரியமாகு பாமுகமே! விருட்சமாய் விழுதெறி கலையகமே! ஆற்றும் பணயின் சேவைக்கு அளப்பெரும் தொண்டின் மகிமைக்கு அன்பு சார் நன்றியே வித்தாகும் மாற்றமொன்றே வழியேடு!