உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

கவி 762 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நினைத்ததெல்லாம் நடக்கவில்லை நடப்பதெல்லாம் நினைத்ததில்லை வேண்டிய நேரத்திலே வேண்டியதெல்லாம் கிடைக்காது தாண்டியே போய்விடும் நினைத்தபடி நடக்காது இதுவரை காலமும் என்னென்னவோ நினைத்தோம் எதுவரை ஆனாலும் பெறவேண்டியே நினைப்போம் எண்ணங்களின் ஊட்டலிலே வாழ்க்கையின் ஆட்டம் என்றல்லவோ நினைத்தபடி இன்றுவரை ஓட்டம் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளையும் நினைப்பாரோ வினை தீர்ப்பவரென அனுதினமுமவரை துதிப்பாரோ நம்மையும் மீறி ஏதோவொன்று இருக்கிறது தம்மால் முடிந்ததை நேரம்பார்த்து தருகிறது இந்தப் புரிதல் இருந்தாலே போதும் சிந்தையின் தன்மையும் தானாக மாறும் இடர்களின் நடுவிலும் பயணங்கள் அவசியம் கடந்ததும் தெரிந்திடும் வாழ்க்கையின் இரகசியம் பிரச்சினைகள் வந்துவிட்டால் என்கின்ற அச்சம் விரட்டிவிட தென்பிருந்தால் அமைதியங்கு மிஞ்சும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றிருந்தால் இங்கு இடம்பெறுவது இழப்பேயாயினும் வருமோ துன்பமங்கு படைத்தவருக்குத் தெரியாதோ எவருக்கு எதுவெதுவென்று கிடைத்துவிடச் செய்யாரோ அவருக்கு அதுவதுவென்று பிழைப்பைக் கெடுக்கும் நினைப்புகளுடனான மானிடா நிலையில்லா வாழ்விதெனும் தத்துவத்தை பேனடா. ஜெயம் 20-02-2025