உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி

மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி

கவி 757 மகிழ்ச்சி ஆயுளின் உயர்ச்சி சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகின்றது புரிந்தோரின் வாழ்க்கை மகிழ்ச்சியால் சூழப்படுகின்றது அறிவுக்கு ஆதாரமே குறையாத முகமலர்ச்சி அறிந்துகொண்டால் அவருக்கு வந்திடுமோ தளர்ச்சி இந்தவுடல் வயதாக தோல் சுருங்கும் சந்தோசத்தை விட்டால் வாழ்வே சுருங்கும் விலைக்கு வாங்க முடியாது மகிழ்ச்சி விளைந்துவிட்டால் வாழ்வே கொண்டாட்ட நிகழ்ச்சி கடினமான சூழ்நிலையை இதுவன்றோ அகற்றும் துடிப்பாக செயற்படவே மனதிற்கு புகட்டும் நகைச்சுவை உணர்விருந்தால் வாழ்விலேது இறுக்கம் பகையேது உறவுக்குள்ளே அன்றாடம் சிறக்கும் எண்ணங்களின் வண்ணங்களிலே மகிழ்ச்சியின் உற்பத்தி உண்டாக்கியே உவகையை வாழலாமே நமைச்சுற்றி இந்த கணம் என்பதுங்கூட மகிழ்ச்சிக்காக சிந்திப்போம் நேர்மறையாய் மகிழ்ச்சியும் பூக்க ஜெயம் 22-01-2024