உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

விடைகொடு விடைகொடு மார்கழியே

விடைகொடு விடைகொடு மார்கழியே

விடைகொடு விடைகொடு மார்கழியே __ என் மார்கழியே மீண்டுமோ வருவாய் ஓய்வெடுத்து __உன் குளிமையினாலே மண்குளிரும் மனம் களிக்க நின்றவளே மலர்வனமாக்கும் பூங்கொடியே __ என்றும் அனுதினம் உன்புகழ் வீசிடுமே அகிலத்தில் ஆனந்தம் உன்வரவே ஆடும் நெஞ்சுக்கு ஆறுதல் தந்தவளே இத்தரை மலரநின்றவளே இகமெல்லாம் ஆளும் பெண்மயிலே மகிமையின் மாதம் மார்கழியில் அஞ்சனை மகனும் தானுதித்தான் வீரமைந்தனை நீகண்டாய் விழுமியங்களைக் காத்து நின்றாய் திருவாசக ஊற்றைப் பாடவைத்தே பீடுடைய பிரமா புரம்மேவ வைத்தாய் திருமகளே விடையழித்து வினையமின்றிக் காத்திடுவாய் விடைகொடு விடைகொடு மார்கழியே சிவா ஈஸ்வரி சர்வேஸ்வரி சிவரூபன்