உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாதவமே உந்தனை.....

மாதவமே உந்தனை.....

மாதவமே உந்தனை.....கவி....ரஜனி அன்ரன் (B.A) 28.11.2024 மாதவ மறவரே மண்ணின் மைந்தரே மறப்போமா உமை நாம் தாயகமே தாரக மந்திரமாய் தார்மீகமே இலட்சியமாய் தியாகமே உன்னத குறிக்கோளாய் விடியல் கனவோடு வித்தாகிய புனிதமான உம் தியாகங்கள் தற்கொடையான ஈகங்கள் தமிழர் எமக்குக் கிடைத்த மாதவமே ! தோல்வியைச் சிந்தனையாக்கி வெற்றியைப் புனிதமாக்கி தன்னிலை மறந்து தேசத்தின் நினைவோடு துயரம் தவிர்த்து வாழ்வினை ஈந்த தூயவரே மாதவரே நீவிர் எம் ஒளியே ! தேசத்தின் தெருக்களெல்லாம் தெம்மாங்காய் எழுச்சி கொள்ள கல்லறை வீரர் கனவினைப் போற்ற எல்லைகள் தாண்டியும் எழுச்சி கொள்வோம் மண்ணிற்கு ஒளிதந்த மாதவ மணிகளை மண்ணின் மைந்தரை மாதவமாக மனதிற் கொள்வோம் - அவர் சந்ததி காக்கவும் கரமிணைப்போம் ! https://www.youtube.com/watch?v=AzX-NzoHM2Q