உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாதவமே உந்தனை

மாதவமே உந்தனை

கவி 751 மாதவமே உந்தனை சாவைக்கொடுத்தேனும் இனத்தை மீட்கத்துடித்தார் நோவை சுமந்தே மீட்புப்போருக்காய் குதித்தார் குலத்திற்கு கிடைத்திட்ட மாபெரும் வரப்பிரசாதங்கள் நிலத்தை பாதுகாத்த இரும்புக் கரங்கள் தேசம் என்பது இவர்களின் கனவானது பேசும் தாய்மொழி இவர்களின் உணவானது அதிகாரத்தின் அடக்குமுறைக்கு வைக்கவே முற்றுப்புள்ளி குதித்து எழுந்தனர் வரிப்புலியெனத் துள்ளி சாதனை படைத்திட்ட சரித்திரப் போர் சாவினைத் தழுவினும் வரலாறு கொண்டார் சிதைக்கப்பட்டார்கள் அவரென எதிரிகள் கொக்கரிக்கலாம் விதைக்கப்பட்ட விதைகளவர் மீண்டும் எழலாம் கார்த்திகை மாதம் சோகத்தை கதைக்கின்றது நீர்த்தவர் நினைவுகள் நெஞ்சினை வதைக்கின்றது அடைவதற்கு இவர்களை தவமென்ன செய்தோம் கிடைத்திட்ட வரங்களை ஒவ்வொன்றாய் இழந்தோம் தியாகங்கள் ஒவ்வொன்றும் மண்ணுக்காக காவியம் மயானத்தில் உறங்கிடினும் வாழுகின்ற சீவியம் வணங்குகின்றோம் வாழ்துகின்றோம் மாவீர செல்வங்களே இனங்காக்க இறுதிவரை உழைத்த தங்கங்களே ஜெயம் 27-11-2024