உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒளியிலே தெரிவது

ஒளியிலே தெரிவது

கவி 749 ஒளியிலே தெரிவது ஒளியிலே தெரிவது இருளகன்ற பாதை அந்த பாதையின் மேலே சுறுசுறுப்பாக மனிதர்கள் ஞாலத்தின் மேலே வெளிச்சத்தின் சாலம் சூரிய விளக்காலெங்கும் ஒளிமயமான கோலம் ஒளியில் தெரிவது இயற்கையின் அழகு எழிலுடன் திகழும் மாட்சிமை உலகு பயத்தை விட்டகற்றி உற்சாகமடையும் உயிரினம் பசியை ஆற்ற விளைந்துவிடும் பயிரினம் ஒளியில் தெரிவது நன்மைகளின் வரவு ஒளித்துநின்று எட்டிப்பார்க்கும் ஓடிப்போன இரவு அருளையே அள்ளித்தரும் இறைவனின் தோற்றம் பெருமைப்படுத்தும் ஒளியாலே பூலோகமே கொண்டாட்டம் ஜெயம் 14-11-2024