உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திசைகாட்டி

திசைகாட்டி

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவிதை ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-37 10-10-2024 திசைகாட்டி திசைகாட்டியாய் தின வழிகாட்டியாய் திறமை புகட்டியவரே உளியால் கல் செதுக்கி உருவம் கொடுப்பது சிற்பி சொல்லால் எமை செதுக்கி வெற்றியாளன் ஆக்கிய நல்ஆசானே! அறியாமை இருளகற்றி அறிவொளி ஏற்றி ஓயாது ஓடோடி ஊருக்குப் பயன் விளைக்கும் பேராறு நீங்களல்லோ உங்கள் பெருமைக்கு நிகருண்டோ! மண்ணில் அ தொடங்கி தாம் வைக்க விண்வெளி நாம் சென்றாலும் மனமுருகி பெருமிதம் கொண்டவரே சேவைக்கு ஈடேது தடம் புரளும் எங்களுக்கு தரமான திசைகாட்டியும் நீங்களே! நன்றி வணக்கம் ஜெபா ஸ்ரீதெய்வீகன்.