உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திசைகாட்டி

திசைகாட்டி

திசைகாட்டி அறிவின் ஊற்றாய் ஆற்றலின் பேரொளிகள் நெறியின் வரமாய் நிலைக்கும் ஆசான்கள் பொறியாய் நுட்பம் காட்டியே பொங்கிடும் அறிவை புகுத்திடும் உளிகள் அகரம் காட்டி சிகரம் தொடவே ஆற்றலின் உயர்வை கூடவே செதுக்கி போற்றிடும் பெருமகனாய் மாணவரை பற்றிட வைக்கும் அறிவின் ஊற்றுகள் கல்வியின் நுணுக்கங்களை திசையெங்கும் பரப்பியே கனிவுடன் பேச எழுத வைக்கும் பொக்கிசங்கள் பள்ளியின் மூலவேராய் பாடத்தை கற்றிட அள்ளியே அறிவைத் தந்திடும் அவனியில் பெருமை திசைகாட்டி ஆசிரியரே! அன்பெனும் ஊற்றாய் அமைந்த பெருவிருட்சங்கள் அகலாய் ஒளிர்க! நிலவாய்ப் பொழிக! ஆசிரியம் வாழ்க! நகுலா சிவநாதன் 1780 https://youtu.be/VQL8hQVKJIo?si=PZHuUYPcWQYzUXwr