உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அவள் குட்டி தேவதை

அவள் குட்டி தேவதை

கவி 742 அவள் குட்டி தேவதை ஆயிரம் நிலவுகள் ஒன்றுகூடி அவளென ஆக பூவொன்று கால் முளைத்து நடந்துதான் போக தவழ்ந்துவந்து தங்கக்கட்டி மடிமீது ஏறுதம்மா மார்பினிலே உதைக்கும் நேரம் கவலை கரைந்துபோகுதம்மா சின்னத்தேவதையின் சிரிப்பினிலே உள்ளமுருகிக் கரையுதடி பிஞ்சு கரங்கள் தீண்டும்போது உயிருருகிப்போகுதடி நரிவெருட்டி தூக்கத்திலே நீ சிரிக்க பூரிப்புடன் இரசித்தேனடி அரவணைக்கும் நிமிடமெல்லாம் சொர்க்த்துக்குள் நுழைந்தேனடி தாத்தாவாய் எனையாக்கிய முத்தான பேத்தியும் நீ பெத்தது மகளெனினும் என் சொத்தே என் சொந்தமே நீ ஆண்டவரின் அறிவை எப்படியுரைப்பேன் அற்புதம் பொன்மணியே கண்மணியே கற்கண்டே கணிரசமே சோறுதண்ணி தேவையில்லை உன்னருகில் கழிக்கையிலே பேறுபெற்றேன் என் மகளே நீ இறைவன் தந்த பரிசம்மா குட்டித் தேவதையே இனி என் ஜீவனும் வாழ்வும் நீதானம்மா சின்னராணியே உன்வரவால் முதுமையையும் மறந்தேனம்மா ஜெயம் 26-09-2024 https://youtu.be/jS5sFWPItJg?si=sL7ssJmF9kI5anQL