உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வானில் பறக்கும்

வானில் பறக்கும்

பிரபஞ்சம் கூட நம் உடலிலுண்டு தரவுகள் பல ஆய்வில் கண்டு தேடுகிறார் இன்னும் எதனை எண்டு நாடுகின்றோம் நானிலத்தில் நல்லது முண்டு புகழ்தேடி பறக்கும் மனிதர் பின்பு புறம்கூறித் திரிவார் என்று நம்பு முன்னாலே சிரித்துக் காட்டி நடிப்பு பின்னாலே ஈட்டியால் குத்திடும் பரிவு பணத்திற்காக எதையும் செய்வர் சிலர் பணமென்றாலும் நாணயம் பார்ப்பார் பலர் மானம்பெரிதென மதிப்பவர் பண்பானவர் மானம்போனாலும் பரவாயில்லை என நினைப்பவர பண்பிலார் வானில் பறக்கும் விமானம் இடம்நோக்கி வானில் பறக்கும் பறவை கூடுநோக்கி மனமோ பறக்கும் அண்டம நோக்கி வானில் பறக்கும் காற்றுடன் சேர்ந்தே!