28.07.18 Saturday FATVTamil Santhai-Veli Live

28.07.18 Saturday FATV பாமுகம் இன்றைய நேரலை நிகழ்வுகள்:

“கேள்விச்சரம் ” நாயகி, எங்கள் சிவதர்சினி ராகவன் அவர்களுக்கு,
இன்று பிறந்தநாள்….
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!
– சிவதர்சினி அவர்களின் பிறந்தநாள் மகிழ்வினை முன்னிட்டு, இன்றைய சந்தைவெளி நிகழ்வை வானலை இணைப்பவர்கள், சுவிஸ் OVP மற்றும் STT சார்பில், :- பவானி மூர்த்தி அவர்கள்..!  
[[     ]]
பிரதி சனிக்கிழமைகளில்,
8AM to 10AM
எங்கள் பாமுகத்தில்,
“”சந்தை வெளி””
www.santhaiveli.com
[இணைய வாணிபம்]
-: இது ஒரு உலக வணிக இணைப்பு :-
[[    ]]

[[    ]]

இன்றைய சந்தைவெளி 4ம் பகுதியில் … [Week 4]
FirstAudio online shopping ன் மேலும் புதிய அறிமுகங்கள் …!

> இலங்கையில், எந்த இடத்திற்குமான பயணிகள் போக்குவரத்து ஒழுங்கு..

!> Gift Vouchers..

>> Fruit [Gift] Basket..
>> Srilankan Specials.. [Hand Craft Products]

லண்டன் நேரம் காலை 8 மணிக்கு.. 
www.santhaiveli.com ஊடாகப்பயணிப்போம்…

இலங்கை <<>> ஐரோப்பா இணைவில்,

நீங்களும் + நாங்களும் 
புதிய புதிய Online பொருளாதார உத்திகள்..!

இணைந்து கொள்ளுங்கள்..!!

+++++++++[[    ]]+++++++++
[][][][][]

#கானக்குரல்2018

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கானக்குரல் நிகழ்ச்சியில்

‘Super singer’ போன்ற ஆங்கிலத் தலைப்பு இல்லை.
இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பு இல்லை.
தென்னிந்தியத் திரையிசைப் பாடல்கள் மருந்துக்கேனும் இல்லை.
‘பிரபல’ வானொலி, தொலைக்காட்சிகளின் பிரசன்னம் இல்லை.
பெரு நிறுவனங்களின் பதாதைகள் இல்லை என பல ‘இல்லைகள்’.
அவற்றுக்கிடையே…

எம்மவரின் உருவாக்கத்தில் இளம் கலைஞர்களின் பங்களிப்பில் சுயவரிப்பாடல்கள் இருந்தன.
எம் கலைஞர்களை ஊக்கப்படுத்தும், உத்வேகம் கொடுக்கும் மனங்கள் இருந்தன.
இலாப நோக்கமற்ற எம்மவர் கலை வளர்க்கும் மனப்பாங்கு இருந்தது.
வந்தவர்களை மாண்பேற்றும் மனப்பான்மை இருந்தது.
வியாபார நோக்கமின்றி கலைக்கான அர்பணிப்புகள் இருந்தன. இன்னும் பல ‘உண்டுகள்’ இருந்தன.

சரி. நிகழ்வைப் பற்றிப் பார்த்தால்..

என்றுமே கேட்டிராத எம்மவர் உருவாக்கத்தில் அழகழகான பாடல்கள்…
தாலாட்டு, தாய் தந்தை போற்றுதல், காதல், குதூகலம், தமிழின் பெருமை என்று பலவகையான 10 பாடல்கள் போட்டியில் இடம்பெற்றன. உண்மையில் இந்த நிகழ்வுக்கு எம் கலைஞர்களுக்கான ஒரு ஆதரவு கொடுப்பதற்காக மாத்திரமே நான் போனேன். இவ்வளவு தரமான பாடல்களை எதிர்பார்க்கவில்லை. வரிகள், மெட்டுகள், குரல் என்று அமர்க்களப் படுத்திவிட்டார்கள் எம் இளம் கலைஞர்கள். அதிலும் அந்தச் சிறார்கள் இசை மிகச் சிறப்பு. சிறிய வயதில் முதிர்ந்த இசை ஞானமும், இசை வழங்கும் வல்லமையும் கொண்ட தனபாரதிக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு. போதாமைக்கு மூத்த கலைஞர்களின் பாடல்களும் சேர்ந்து கொண்டன. அத்துடன் சிறப்புப் பாடல்களும் மிகச் சிறப்பு. இப்படியொரு நிகழ்வை இலாப நோக்கமில்லாமல் முன்னெடுத்த நடாமோகன் , சர்மா அண்ணாக்களுக்கு ஒரு பெரிய பாராட்டைத் தெரியப்படுத்தலாம். ஆதரவு கொடுக்க வந்த பார்வையாளர்களுக்கும் பிரபலங்களுக்கும் நன்றிகளை அள்ளித் தெளிக்கலாம். இப்படியான நிகழ்வுகள் பற்பல நடைபெற்று எம் கலைஞரை ஊக்குவிக்கும் காலம் உருவாக வேண்டும்.

அடுத்து,
கொத்துரொட்டி இல்லாத சாப்பாட்டுக்கடை வித்தியாசம். அதிலும் தானியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கஞ்சியை £1இற்கு விற்ற அந்த கடைக்காரரின் முயற்சியை நன்றாகவே பாராட்டலாம்.

ரகுநாதன் அண்ணா, ‘ஓ வண்டிக்காரா’ புகழ் சத்தியசீலன் அண்ணா, திரு.திருமதி அநுரா, கிரி அண்ணா என்று பிரபல பாடகர்களின் பாடல்களும் வருகையும் மெச்சத்தக்கன. அதைத் தவிர்த்து சிறப்புப் பாடல்கள் பாடியவர்களும், பாடல்கள் பாடாவிட்டாலும் தம் ஆதரவைத் தர வந்த பாடகர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

முத்தாய்ப்பாய்..
எந்த இலாப நோக்கமுமின்றி சுழன்று சுழன்று படமெடுத்து நிகழ்வை நிழற்படங்களாக்கிய பாபா லக்‌ஷி அண்ணாவின் சேவை மிகச் சிறப்பானது.

மென்மேலும் இப்படியான நிகழ்வுகள் வரட்டுமே… நாங்கள் இருக்கிறோம் ஆதரவும் உத்வேகமும் தருவதற்கு.

தோழமையுடன் தூயவன்

[[    ]]