க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 292 சிறுமை கண்டு பொங்குவாய் அவன் பெயர் ஒழிக அவன் ஒரு திருடன் ஓங்கி ஒலிக்கும் குரல்கள் ஒத்து ஊதும் மக்கள் ! கை ஏந்தி வாங்கிய வெள்ள நிவாரணமும் கரம் கூப்பி சொன்ன நன்றியும் கால் போத்தல் சாராயத்துடன் கைக்குள் வைத்த பணத்துடன் நா மாறி போய் பலி போடும் இவர்களை ! நன்றி கேட்ட மாந்தருக்கு நன்மை செய்வது குற்றமன்றோ ! சிறுமை கொண்ட உள்ளதைக் கண்டு சீறும் அவன் […]

சக்தி சங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு பூக்கும் புத்தாண்டு ********************** அறுசீர் விருத்தம் சீர் வரையறை காய் காய் காய்/ காய் காய் காய் நம்பிக்கை ஊட்டுகின்ற ஆண்டாக நானிலத்தில் எங்கணுமே நன்மைகளும் தும்பிக்கை யான்அருள வேண்டுமன்றோ துன்பங்கள் நீங்கிடவும் துரோகங்கள் நம்மைவிட்டுத் தொலைந்திடவும் நல்லதொரு நாடாக மலரவேண்டும் என்றேதான் கும்மியடித்து வரவேற்போம் புத்தாண்டை குதூகலமாய்க் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்! சீராக ஆட்சியும்தான் நிலவணுமே சிறுமைகளும் மறைந்திடவே வேண்டுமன்றோ நேராக நடத்திடவே நேர்மையுள்ள நெஞ்சங்கள் பிறக்கட்டும் புத்தாண்டில் ஏராளம் நன்மைகளும் […]

சக்தி சஞர்

சாமினி துவாரகன்

வண்ண சேலை உடுத்தி வகிரெடுத்து பூச் சூடி வண்ண எடுப்புடனே வருகிறாள் வருட மகள் வருக வருக நீ!!! எண்ணம் எல்லாம் கோலமிட்டு ஏற்றி வைத்த தீப மதில் எதிர்மறை சுட்டெரித்து எழுக்கின்றாள் வருட மகள் வருக வருக நீ!!! கண்ணிலே ஒளி கொண்டு கருத்திலே வழி விட்டு துன்பத்தை துடைத்தெறிய கரம் நீட்டி வருகிறாள் வருக வருக நீ!!! புன்னகை பூத்து புதுப்பொழிவு கொண்டு புது வாழ்வு தரவென புது ஆண்டு பிறக்கின்றாள் வருக வருக […]

சிவா சிவதர்சன்

‘பூக்கும் புத்தாண்டு” இன மத ரீதியில் உலகெங்கும் கொண்டாடும் புத்தாண்டு நாட்டுக்கு நாடு வேறுபட்ட திகதிகளில் இடம்பெறுவதுண்டு ஆங்கிலேய கிறீஸ்தவ ஆண்டுஆரம்பம் தை ஒன்று புத்தாண்டு இலங்கையில் சிங்களதமிழ் சித்திரை ஒன்று புத்தாண்டு மனிதவாழ்வில் மிகமுக்கிய நிகழ்வு புத்தாண்டு வாழ்வின் வளம் பெருகநம்பிக்கையூட்டுவது புத்தாண்டு தமிழரின் சித்திரைப்புத்தாண்டுக்கு சோதிட ஞானமுமுண்டு மருத்து நீர்வைத்து தோய்தல் தமிழ்பண்பாடு கோலமிட்டு முக்கனிகள் வெற்றிலை பாக்கு பூ வைப்பது இல்லங்கள் ஆலயங்களில் பொங்கலிட்டு வரவேற்பது இறையருளால் ஆண்டுமுழுவதும் நலமே வாழவழிவகுப்பது ஆலயதரிசனம் […]

வசந்தா ஜெகதீசன்

பூக்கும் புத்தாண்டே… நல்வாய்ப்பின் அரணோடு நாள் வளர்ச்சித் திறனோடு விடியல் தரும் யுகமாக வென்றுயரும் புத்தாண்டே மங்களத்தின் வாத்தியங்கள் மத்தாப்பு ஒளிகீற்றும் தங்குதடை ஏதுமின்றி தைரியத்தின் மிடுக்கோடு எங்கும் எழில் பூத்திருக்கும் எண்ணத்தின் ஏறுமுகப் புத்தாண்டே புவி வருக! புதுயுகமாய் நீ மலர்க! வளர்ச்சி நிறை வரலாறு வானுயர்ந்த புதுயுகமாய் நீ மலர்கவே! வற்றாத கொடை வளங்கள் கல்வி நிலை கைங்கரியம் கற்றலில் ஓங்குபுகழ் நித்திலமே வென்றுயர்க புத்தாண்டாய் பூத்தெழுக! தெவிட்டாத தேனமுதாய் தேசமெங்கும் நிறைவளங்கள் தொழில்நுட்ப […]

பாலதேவகஜன்

பூக்கும் புத்தாண்டு புதிதாய் பூக்கும் புத்தாண்டே! வருக விதியை வெல்கின்ற மதியையே தருக. பதியில் அமர்ந்தவரே! உம் கதியாய் நின்றவர் கஸ்ரங்களை போக்கும் கருணையினை காட்டும். மாற்றம் நிகழுமென்று எதிர்பார்திடும் புத்தாண்டே! போற்றும் ஆண்டாய் நீ பூத்திட மாட்டாயோ. தோற்றதன் வலிகள் தொலைந்திட வேண்டும் வெற்றியின் படிகள் தொடர்ந்திட வேண்டும். பிரிந்தவர் அனைவரும் சேர்ந்திட வேண்டும் சேர்ந்தவர் யாவரும் செழிப்புற வேண்டும். மாபெரும் ஆண்டாய் நீ மாறிட வேண்டும் அமைதியில் உலகே! உறைந்திட வேண்டும். மனங்களில் குரோதங்கள் […]