ஔவை

இதயம் ======= அன்பின் வடிவாய் அகிலத்தில் நீயே இன்ப ஊற்றின் இடமும் நீயே துன்ப வலியின் துடிப்பும் நீயே அன்றாட இயக்கம் அனைத்தும் நீயே காதலின் சின்னமாய்க் காட்சியில் நீயே சாதலின் முடிவில் சான்றும் நீயே ஈதலும் இதயம் இளகினால் தானே நீதரும் இடமே நிரந்தரம் அன்றோ உணர்வை உணரும் உறுப்பும் நீயே குணத்தைக் காட்டும் கருவியும் நீயே முகத்தில் ஒளியாய் மலர்வதும் நீயே அகத்தில் இருந்து ஆள்வதும் நீயே உயிரின் மூலமும் உனது துடிப்பே உயிர்கள் […]

கீத்தா பரமானந்தன்

இதயம்! என்னை யியக்கும் மின்னிசையே எழிலாய்த் தொடரும் தனியுறவே பொன்னை விஞ்சும் பெருந்தனமே பொதித்து நிற்பா யாயுளையே சின்ன வுருவாம் சித்திரமே சிந்தை யுன்றன் கைவசமே! முன்னை யுதித்த முத்தெனவே முழுதாய்த் தொடர்வாய் பத்திரமாய்! விருப்பும் வெறுப்பும் சுமந்திருந்தே வீழ்த லெழுதல் வகுக்கின்றாய் அரும்பு மாசைக் கடலெனவே ஆட்டி வைத்துச் சிரிக்கின்றாய் கரும்பாம் காதல் கோட்டையெனக் கனிந்த காட்சி யானவளே! வருந்தாப் பாதை தந்துநின்றே வனப்பைத் தருவா யென்றனுக்கே! இல்லை மேன்மை யுனக்கிணையாய் இதய மென்னும் பெட்டகமே! […]