நகுலா சிவநாதன்

அச்சாணி நீயல்லவோ! இல்லத்தின் விளக்காகி எழுகின்ற நட்சத்திரம் உள்ளத்தின் மகிழ்விற்காய் உளமாரக் காத்திருப்பு உலவுகின்ற பேரொளியே உணர்வான பெண்மையே! ஞானத்தின் அறிவுதனை நாளுமாய் பெற்ற சோதியே! பிரபஞ்ச தூணாக பைந்தமிழின் பேரோளியே! செந்தமிழின் நறுந்தேனே! தெவிட்டாத உன் கடமை தேர் போன்ற வாழ்விலே தேனான பெருவிருட்சம் அச்சாணி நீயாக ஆளும் உலகின் அரவணைப்புப் பெட்டகமே! உச்சம் தொட உயர்வாய் என்றும் ஊக்கம் படைத்து எழுவாய் நாளை! நகுலா சிவநாதன் 1752

கெங்கா ஸ்ரான்லி

பெண்ணின் பெருமை —————- பெண்ணின் விடுதலைக்காய் பேரொலி எழுப்பினர் பாரதியோ பாட்டாலே புதுமைப்பெண் படைத்தான் பெண்கள் இல்லாதுலகிலே ஆண்களினாலே என்னபயன் அதுதான் ஆதாமைப்படைத்த இறைவன் ஏவாளைப்படைத்தான் பெண்கள் அடுப்பங்கரை ஆண்டது போதுமென்று இப்போ அகிலத்தையே ஆளுகிற நிலைமை மண்ணிலே மட்டுமல்ல விண்ணிலும் பறக்கின்றாள் பெரிய பதவிகளும் பெண்ணும் வகிக்கின்றாள் ஆண்களைவிட அதிகம் படித்து பட்டம்பெறுகின்றாள் குடும்பம் சுற்றம் சூழல் தழுவுகின்றாள் அறிவிய்லிலும் ஆரணங்கு ஆற்றல் படைக்கின்றாள் பெண்ணின் பெருமை சொல்லி மாளாது பெண்ணே மண்ணை மதித்து வாழ்வில் […]

ரஜனி அன்ரன்

விழித்திடு பெண்ணே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.03.2024 விழித்திடு பெண்ணே விழித்திடு உடைத்திடு தடைகளை உடைத்திடு படைத்திடு சரித்திரம் படைத்திடு புரட்சிப் பெண்கள் வாழ்ந்த பூமியிது புரட்டிப் போட்டுவிடு கயவர்களை புதுயுகம் படைத்துவிடு விழிப்போடு ! பதுமையென்றும் பாவையென்றும் பவ்வியமாய் அழைத்து உன்னை பாசாங்கும் செய்திடுவார் மாயவலையில் சிக்காது தூயவழியில் பயணித்து தூர விலத்திவிடு துஸ்டர்களை ! பேதையரே நிஜக்கண்களை ஒருகணம் திறந்து பாரும் காமுகர்களால் கயவர்களால் கசங்கி மடிந்தவர் எத்தனை பேர்? விடியும் பொழுதுகள் […]

வசந்தா ஜெகதீசன்

வீறுகொள் விடியலே…. தகமை உரமிட தன்னிறைவு பலமிட தண்ணொளி மிளிரும் தரணியே மகிழும் தன்னம்பிக்கை ஆற்றல் பெண்ணினப் பெருமை பேறுகொள் வரமே மார்ச் எட்டு மகளிர் தினமே மதியின் வலுவில் மாற்றத்தின் உலகில் எத்தனை புரட்சி எண்ணற்ற உயர்ச்சி வலுப்பட வாழ்தலே வலிமையின் உறுதி நேருக்கு நேராய் நிமிர்தலே தகுதி பட்டங்கள் பலவென பாடங்கள் அறிவென சுட்டிட சுட்டிட பொன்னென ஒளிரும் பட்டிட பட்டிட பாதைகள் புரியும் அறிவின் வழியே அனர்த்தம் கழியும் ஐக்கியத் தகமையில் அவனியாய் […]

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.03.24 ஆக்கம் -306 சிறகுகள் இறகு உதிர உதிரச் சிறகு முதிர்ந்தாலும் காற்றின் தாலாட்டுக் கீதமுடன் வானத்தில் பறந்து களைத்தது தாய்க்குருவி உச்சிக் கிளையில் புல்லின் பஞ்சு மெத்தையில் பசியோடு காத்திருக்கும் குஞ்சுக் குருவியை எண்ணிப் பார்த்தது பரிதாபமாய் பாரினில் உல்லாசமாகச் சுற்றிடும் தன் கால்களில் ஏனிந்த நடுக்கம் வயது போய்விட்டது என்பதாலா ? எங்கும் தீனி கிடைக்காததால் சோகமுடனே திரும்பியது இரைக்காகக் காத்திருந்து வெளியே வந்த சின்னக் குஞ்சுகளைக் கொத்திக் கொத்தி கீழே தள்ளி விட்ட […]

Jeya Nadesan

கவிதை நேரம்-07.03.2024 கவி இலக்கம்-1835 இயற்கை மாற்றங்கள் ——————– இறைவன் படைத்த இயற்கை பல மாற்றங்கள் கோடை வரவில் வெப்பம் கூடுது கடைகளெல்லாம் உடுப்புக்கள் குவியுது மக்கள் கூட்டம் ஏறி இறங்குது தெருவால் போக வா வாவென்று அழைக்குது கஸ்டப்பட்டு கடன் பட்டு பட்டு வாங்க நினைத்திட்டு பூக்கள் நிறை வர்ண சட்டை கோட்டோடு ஆசைப்பட்டு தெரியப்பட்டு மார்க் பார்த்து காசைப் போட்டு வாங்கி போட்டு உச்சி வெயில் தலையிலே சுட்டு விட்டு களைப்போடு வந்து சேர்ந்து […]

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 256 வேலி அடைப்போம் வரம்புகள் மீறும் வாழ்க்கைப் படலம் வயதுகள் இன்றிய சிறுவர்கள் வன்முறை ஆணுடன் ஆணும் பெண்ணுடன் பெண்ணும் கைகோதல் திருமண மற்று சேர்ந்து வாழ்தல் முறைமைகள் அற்ற தொடுப்புகள் உரிமைகள் அற்ற காணி அபகரிப்புகள் ஏய்ப்புகள் போலிகள் பித்தலாட்டங்கள் அடைத்துடுவோம் வேலியை அங்கிகரிக்கப்பட்ட வாழ்க்கை முறைமைக்காக! க.குமரன் யேர்மனி