சிவரூபன்சர்வேஸ்வரி

மார்கழியாய் குளிர்ந்து.விடு <<<<<<<<<<<<<<<<< சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார் சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார் கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார் கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார் காலம் நன்மைதான் செய்யும் காப்பான் இறைவன் என்று நம்பு பாதம்பார்த்துவீழ்ந்து எழு பரிவாய்பேசிவாழ்ந்துவிடு வீழும்நிலையைவிரட்டிவிடு விவேகமாக விரைந்து எழு தனிமரம்தோப்பு ஆகாது என்பார் தனித்துவம் இல்லையெனில் -உனக்கு சிறப்பு இருக்காது திணிப்பது நன்று எண்ணிவிடலாம் திங்களில்மார்கழியாய்குளிர்ந்துவிடு கவிஞர் சிவரூபன்சர்வேஸ்வரி.

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 177 என் நண்பி அன்பான் நண்பி அழகான தோழி 16 ஆனதே வாழ்த்துக்கள் தோழியே உன்னை சந்தித்ததை மறக்கமாட்டேனே மகிழ்ச்சியை தந்த மாமாவுக்கும் வாணிமாமிக்கும் நன்றியே கபி நீ மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கபி நன்றி 😊 அபிராமி 😊

கெங்காஸ்ரான்லி

இருட்டில்… ————- மாலை விரைவில் இருட்டி விடும் காலை மேகமூட்டம் இருண்டிருக்கும் பகல்பொழுது குறைவாகவே இருக்க இரவோ கூடின நேரம் இருண்டிருக்கும் வீடுகள் எல்லாம் அமைதி நிலவும் றோட்டெல்லாம் வெறிச்சென இருக்கும் மக்கள் நடமாட்டம் அருகியிருக்கும் பாக்கள புனைய உள்ளம் ஏவும் இருட்டிலே எல்லாமே சூனியம் மரட்டும் பயமும் மனதில் தோன்ற உருட்டும் சத்தம் ஓசை கேட்க வெருட்டும் தாக்கம் விறைத்து நிற்க இருட்டை விரும்புபவர் இரக்கமிலார் பொருளும் பொன்னும் தேட்டமடைவார் எண்ணும் யாவும் காரியமாக வேண்டி […]

Vajeetha Mohamed

கேளு மச்சி நம்ம நாட்டுநடப்ப வேலையும்தொல்ல மச்சி வ௫மானம் இல்ல மச்சி ஊரெல்லாம் ௨றங்கிப்போய் கிடக்கு மச்சி சுற்றிவர விலையெல்லாம் பவுன் கணக்குமச்சி நாட்ட தாண்டிப் போக வழியுமில்ல மச்சி நாட்டில வாழ முடியவில்ல மச்சி குட்டிச்சாக்கில காசுகொண்டுபோய் சொப்பின் பேக்கில சாமான்வாங்கி வாரோம் மச்சி பெட்டியான் யப்பான் செத்தல்மீன் பவுசுகாட்டுது ஊ௫க்குள்ள கொட்டபாக்கு முட்டைக்கு ஆறுபது ரூபாகண்கெட்டவில சொல்லுறான் கேளுமச்சி மூன்று நான்கு புள்ளவுள்ள ஊட்டுள்ள முழுப்பட்டனி கிடக்குது தினம் விடியல்ல கேளுமச்சி கேளுமச்சி என்ன […]

இரா.விஜயகௌரி

மீண்டுமோர் கார்த்திகை………. மீண்டெழ முடியாத பேரிடிகள் மீட்பரை தேடிடும் வாழ்வு நிலை ஆதாரமற்ற வாழ்வுச்சுழற்சி அலைந்தலைந்து. தேடுடுகின்றோம் -நாம் தீபமும் தூபமுமய் வணங்கிடுவார் ஆயிரமய்அரங்குகளில். நினைவெழுச்சி அவலமாய் தினம்தினம் அலைகின்றோம் அனுசரிக்க உறவுகளின் கரங்களெங்கே வானத்தின் விரிசல்களாய் குடிசைகளும் வறுமையின் கோடுகளாய் வாழ்வு வட்டம் எதையெண்ணி எமையவர் விட்டகன்றார் அந்த உன்னத்த்தை உணர்ந்தார் யாருளரோ யாசகம் நாம் கேட்கவில்லை -நம் குமுறல்களால் கோலமிட்டு. வாழுகிறோம் வழிகாட்ட உறவுகளைத் தேடுகிறோம் பரிவட்டம் பல்லக்குஎதுவும் வேண்டாம்

ரஜனி அன்ரன்

“ கார்த்திகையாள் வரவு “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023 கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் கலகலவென விழித்து விட்டாள் மழை வெயில் குளிரென மத்தாப்பைத் தாங்கி நின்று முத்தாப்பாய் வந்து விட்டாள் ! காலநிலையும் எழிலூட்ட காற்றலைகள் மோதிவர கார்காலம் மழை பொழிய கணகணப்பும் கூடிவர கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் ! மழைச் சாரல் அடித்துவிட மரக்கிளைகள் இலை உதிர்க்க மஞ்சள் வர்ண இலைகளும் தான் மண்ணினை அலங்கரிக்க மலரினமும் மயங்கிவிழ மலர்ந்து விட்டாள் கார்த்திகையாள் ! […]

வசந்தா ஜெகதீசன்

மனச்சாட்சி….. வெந்து மடிந்து நாம் வெற்றிதொலைத்தாலும் வேதனை சுமந்திட்ட அன்றில் பறவைகளாய் ஆர்பரித்து மடிந்தாலும் அகத்தின் கூட்டிற்குள் ஆழப் புதைந்தது ஆற்றும் செயல்களை ஆய்ந்து அளப்பது வேற்றுச் செயல்களை வெட்டிப்புதைப்பது வேர்கொண்ட சாட்சிக்கூடு விலத்தாத ஆட்சிக்கூடு தான் கொண்ட நேர்மையை தர்கித்து தரிசிக்கும் தன்னியல்பின் பயணத்தை நேர்மையில் நிலைப்பிக்கும் உண்மையின் முதலாளி உராய்கின்ற தொழிலாளி அகத்தின் நீதிபதி ஆழஉழும் மனச்சாட்சி புகுந்த பூத்திட்ட அகத்தை புடமிடும் நின்று நிதானித்து நிஜத்தை நிலைப்பிக்கும் உள்ளகத்தில் உறங்காது உண்மையை மறைக்காது […]