ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.04.23 ஆக்கம்-265 ஏங்கும் மனம் உயிரில் உரிமையுடன் ஊக்கமிட பயிரை வளர்த்துப் பார்ப்பது போல் புத்துயிர் தந்து சத்துயிராக்கினாள் எத்தனை துன்பம் வந்திடினும் அத்தனையும் இன்பமாக்கினாள் அன்பே இன்பமயம் அவளோ தெய்வமயமாய் எனக்கு அன்னை ஆனாள் என் கண்ணிற்கு ஒளியூட்டி தன் நெஞ்சில் நிறுத்தி அன்புக்கு இலக்கணம் ஆனாள் என் ஒவ்வோர் அசைவிலும் பரவசமூட்டி கண்ணை இமை காப்பது போல காவலாளியானாள் எங்கு பார்த்தாலும் அவள் முகமே ஏதோ மனம் ஏங்குதே என்றும் என்னுடன் வந்திடு என்று […]

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்:219 25/04/2023 செவ்வாய் ஆற்றல் ———- ஆற்றல் என்ற முனைப்பது, அறிவை முதலாய் கொண்டது! போற்றல் தூற்றல் ஏற்பது! போக்கும், வரவும் உணர்வது! பிறப்பில் ஆற்றல் வருவது, பிரமன் கொடுத்த வரமது! பொருப்பில் ஒளிரும் ஒளியது, பூவுக்கு மணமாய் இணைவது! கறையான், புற்று சமைப்பது, கருவில் உருவான அமைப்பது! இறைவன் கொடுத்த திறனது! இகத்தில் நாமும் சுவைப்பது! பயிற்சியால் ஆற்றல் பெறுவது, பலநாள் முயற்சியின் பலனது! உயர்ச்சி நோக்கிய உழைப்பது, உயர்த்தும் வாழ்வின் […]

இரா.விஜயகௌரி

சித்திரை வந்தாளே……… சித்திரை மகளாள் இத்தரை மீதில் நித்திலம் கொழிக்க வாழ்வெழுதி புத்திளம் பூவாய் இதமாய் நிலவாய் எங்கணும் மகிழ்ந்திட விரிந்தெழுந்தாள் பட்சிகள் குலவின பாட்டினை எழுதின தேன்துளி சுவைத்த வண்டினம் மயங்கி பூவிடை மகரந்த துகள் சிந்த எழில் கோலமிட்டனள் பூமகள் இங்கே தென்றல் அசைந்தது மதுரமாய் ஒலித்திட காணுமுயிரெலாம் கனிந்து ரசித்திட பொங்கிய சூரியன் விரித்த கதிரினால் ஆனந்த வெள்ளத்தில் காசினி மகிழ்ந்தது சித்திரை மகளே சீர்நிறை உருவே பொற்பதம் பதித்து புன்னகை சிந்திட […]

ஜெயம் தங்கராஜா

கவி 649 வாழ்க்கை இதனால் ஆளப்படுகின்றது தாயிடம் கேட்காமலே கிடைப்பது தந்தையிடம் அளவற்றுக் கிடப்பது உறவுகளால் கிடைத்துவிடின் வரமாகும் இறைவனுக்கு ஒத்ததே இதுவாகும் நட்பின் தரையில் முளைக்கும் காதலும் ஒன்றுவிடாமல் சேமிக்கும் உளங்கொண்டவர் உடல் அழகாகும் உண்மையில் கொண்டால் பாக்கியமாகும் உலகத்திலே உயர்ந்த பரிசு அகிலத்தில் விலை மதிப்பில்லாதது எதையும் எதிர்பாராமல் கொடுப்பது பகிர்ந்து கொண்டால் ஊறுவது இனம் மொழி அறியாதது இரக்கம் கருணையின் தாயகமானது உண்மையானது எவரையும் ஏமாற்றாதது வாழ்வின் அடிப்படையின் அடக்கமானது இதன் இராட்சியத்தில் […]

pon.tharma.

வணக்கம் . இது வியாழன் கவி .19.04.23 இலக்கம் -540 தாத்தாவும் நானும் . ::::::::::::::::::::::::::::::::::::: மூத்த குடிமகனார் ,முழு நேரமும் முனைப்புடன் தேட்டம் . ஆத்துப் பறந்துமே நானும் ,கூடவே என்றுமே ஓட்டம் . வயதினில் வேற்றுமை , காட்டும் .(எங்க ) வெளி வேஷத்தில் ,இருவரும் இணை இல்லாத் தோற்றம் . நரை ,திரை இருவர்க்கும் ,சமமாக உண்டு . நடுத் தண்டினில் ,கோணலும் சேர்ந்துமே உண்டு . அகண்ட பெருத்த நல் அழகான […]

Jeya Nadesan

கவிதை நேரம்-20.04.2023 கவி இலக்கம்-1675 வசந்த காலம் ——————— வசந்த காலம் வந்து உதித்ததே நினைவில் என்றும் வசந்த காலம் கனவில் இன்று கோடை காலம் சுற்றுலா சென்றோர் வசந்தம் வர வேற்பர் நீரை நாடி ஓடி அரை குறை ஆடை குறைப்பர் உற்றார் உறவினருடன் உண்டு கழித்து மகிழ்வர் இளையோர் புதுப்புது நாடுகள் செல்வர் ஓய்வு எடுத்து உண்டு மகிழ்ந்து புதினங்கள் அறிவர் பச்சைப் பசேலென புற்தரை அழகிய காட்சிகள் இலை துளிர் விட்டு அரும்புகள் […]

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 192 வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த ஓவியமாய் பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாமாய் சிறந்த பக்கங்கள் நிறைந்த நூலாய் பல அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை மலர்களும் முட்களும் கொண்ட பல வலிகளை கடக்கும் போது பூந்தோப்பாய் மாற்ற முயன்றிடு கிடைக்கும் புனித வாழ்க்கை நலம் பெற்று வாழ்ந்திட தொலை தூர பார்வையோடு குறிக்கோளுடன் வாழ்ந்திடு மகிழ்வுடன் வாழ்வாய் நீ நன்றி வணக்கம்