வசந்தா ஜெகதீசன்

பாரம்பரியமே.. தொன்மைக்கு புடமிடும் தொடர்வாழ்விற்கு வழியிடும் வழிகாட்டல் தொடராகும் வரலாறு பதிவாகும் ஆதியின் முதற்குடியாய் அடித்தளத் தமிழ்க்குடி பாரம்பரியத்தின் விதைப்பிடல் பண்பாட்டு பகிர்வுகள் விழுமியத்தின் வேராகும் வீறுகொள் வாழ்வாகும் காலத்தின் சுழற்சியில் கருக்கொள் சிந்தையில் பாரம்பரியமே பண்பாட்டு வேதம் தலைமுறை தாங்கும் தனித்துவ கீதம். நாளைய உலகில் நம்பிக்கை வாழும்.!. நன்றி.. மிக்க நன்றி

வசந்தா ஜெகதீசன்

தொன்மைக்கு புடமிடும் தொடர்வாழ்விற்கு வழியிடும் வழிகாட்டல் தொடராகும் வரலாறு பதிவாகும் ஆதியின் முதற்குடியாய் அடித்தளத் தமிழ்க்குடி பாரம்பரியத்தின் விதைப்பிடல் பண்பாட்டு பகிர்வுகள் விழுமியத்தின் வேராகும் வீறுகொள் வாழ்வாகும் காலத்தின் சுழற்சியில் கருக்கொள் சிந்தையில் பாரம்பரியமே பண்பாட்டு வேதம் தலைமுறை தாங்கும் தனித்துவ கீதம். நாளைய உலகில் நம்பிக்கை வாழும்.!. நன்றி.. மிக்க நன்றி

நேவிஸ் பிலிப்

கவி இல(99) 19/04/23 தாயினும்சிறந்த:::: நலம் தரும் மழையாய் -அன்பை நானிலம் எங்கும் பொழிந்து இரவும் பகலும் விலகாது இதயத்தில் இரக்கத்தை சுரந்து இமைப் பொழுதேனும் மறவாத அன்புக்கு இலக்கணமானாய் இதயங்கள் ஏங்கும் வேளையிலே இரங்கிடும் அன்பாய் திகழ்கின்றாய் குன்றுகள் தகர்ந்து போனாலும் கொள்கைகள் மறைத்து போவதில்லை குறையற்ற அன்புடனே நாளும் எம்மைக் காக்கின்றாய் இறப்பினும் உயிர்ப்பாய் இருக்கின்றாய் இரவிலும் பகலாய் ஒளிர்கின்றாய் தாயினும் சிறந்த தயைக் கடலே உந்தன் தாள் மலர் பணிந்தே போற்றுகின்றோம் நன்றி […]

ஜெயம் தங்கராஜா

சசிச ஆற்றல் உன்மீது உனக்கு நம்பிக்கை வேண்டும் என்றுவிட்டால் கால்கள் தடைகளைத் தாண்டும் எண்ணற்ற ஆற்றல்கள் உனக்குள்ளே உண்டு கொண்டுவா அவற்றை எவையெனக் கண்டு பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் இறப்பிற்குப் பின்னரும் சரித்திரமாகத் தொடரலாம் இயலாத காரியம் எதுவுமே இல்லை முயன்றால் வசப்படும் வானத்தின் எல்லை ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் கொட்டிக்கிடங்கின்றன அறிந்துவிடு அவ்வளவு சக்தியையும் சாதனையாய் புரிந்துவிடு வளர்ச்சியும் வீழ்ச்சியும் வாழ்க்கையின் நிகழ்ச்சி தளர்ச்சியிலும் இழந்து விடக்கூடாது மகிழ்ச்சி எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை மாறலாம் தப்பிக்க […]

கெங்கா ஸ்ரான்லி

இயற்கை நியதி —————- இன்றைய உலகிது இயற்கையின் சுழற்சியே இயலுமோ இயற்கையை வென்றிட மனிதனால்் சகலமும் சப்தஸ்வரம் சாதனையாகும் சரித்திரம் மக்களும் மயங்கிடும் மந்த செயலிலே சொக்கியே நிற்கிறார் சொந்தமாய் பணத்திலே கற்களும் அழகிய சிற்பமாய் தெரிகையில் முற்றத்து செடிகளும் முன்னோக்கி வளருமே எதுகை மோனை மனிதருக்கா எஞ்சிடும் எண்ணம் பந்தத்திற்கா ஏற்றமும் தாழ்வும் இயற்கையின் நியதி இதிலென்ன கனதி இப்புவி மாந்தருக்கு மதியுடன் செயற்பட்டால் மாற்றுமா அனைத்தும் விதிவந்தால் மதியும் மறைக்கும் கண்ணையும் மறைக்குமாம் இதுவும் […]

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1799! நாட்டு நடப்பு! வீட்டு வாடகை உயர்வோ துயரு விழுந்தடித்து வேலை செய்தும் தொலைந்து போகுதே இருப்பு! இருப்பதைப் பகிர இல்லையே மனது இங்கே நாட்டுக்கு நாடு இதுவே பிழைப்பு! பொருளின் விலை மலையென ஏற மிச்சப் பிடிப்பில் எஞ்சியது ஏதுமில்லை! கடுகதி உணவும் கரையும் காலமும் தொலைவில் உறவும் தொடர்கதை ஆனது! சிவதர்சனி இராகவன்

ரஜனி அன்ரன்

“ பூமித்தாய் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023 அழகான ஒரு கோளம் அடுக்குகள் கொண்ட மாடம் அடைக்கலம் தந்த கூடம் அதிசயங்கள் நிறைந்த தடாகம் ஆதவனைச் சுற்றிவரும் ஆரணங்கு – இவள் ஆதியாய் உதித்த அன்னை பூமித்தாயே ! இறைவன் அளித்த வரம் இயற்கை தந்த பொக்கிஷம் உலகையே சுமக்கும் தாய்மடி உன்னதமான பூமித் தாய்மடி பூமித்தாய்க்கென ஓர் தினத்தை முத்தாப்பாய் தந்ததே ஐ.நா மன்றும் சித்திரைத் திங்கள் இருபத்தியிரண்டினை ! எழில் மிகுந்து சோலைகள் மலர்ந்து […]

Selvi Nithianandan

அழகானாய் 566 தண்ணீருக்குள்ளே வாழ்வென்ற நினைப்பு தட்பவெப்பமும் அமைந்திட்ட சிறப்பு குவாக் குவாகென நீருக்குள்ளே பறப்பு குளித்துவிட்டு சன்பாத்தும் எடுப்பு தாம்பத்தியம் தெரியாத இருப்பு தாதிகளே இல்லாத பிறப்பு தரணியிலே பிறந்திட்ட சிறப்பு தாரகைபோல் அழகினிலே ஜொலிப்பு சகதி நீருக்குள்ளும் அழகான மிதப்பு சடுதியாக குஞ்சுகள் அதிகாலை பொரிப்பு சமையலுக்காய் பலராலும் பிடிப்பு சுவைக்கு நல்லதென்ற கணிப்பு விடுமுறை வந்தால் சிறுவர்களின் ரசிப்பு விளையாட்டாய் உணவுகள் கொடுப்பு வீதியோரங்கள் தாண்டி தடைமறிப்பு வீசா இல்லா பயணம் பிரமிப்பே

நகுலா சிவநாதன்

ஆற்றல் பொங்கும் புதுமை மேலோங்க பொலியும் ஆற்றல் புகழ்மேவ எங்கும் பசுமை விரித்தாட எழிலாய் வறுமை அகன்றிடுமே தங்க குணமே கொண்டோரை தரணி போற்றும் புவிமேலே திங்கள் போலே நீயிருந்தால் திலகம் மாக ஒளிமேவும் ஆற்றல் ஒன்றே அகிலத்தில் அனைத்தும் திறமை வளர்த்திடுமே ஊற்றாய் எண்ணம் உலகாள உரமாய் சீர்மை நிலைத்திடுமே நாற்றாய்க் கலைகள் வளர்ந்தோங்க நதியாய் பெருகும் நுண்ணறிவு போற்றி நாமும் பொழுதெல்லாம் பொன்போல் அறிவை தேக்கிடுவோம். கற்ற கல்வி கணக்கின்றி காலம் வரையும் கணக்கினிலே […]