தேர் இழுக்க கூடிய கூட்டம்
தேர்தலுக்காய் கூடுது
தேர் இழுக்க ஆளின்றி
சாமியோ இயந்திரத்தில் போகுது
தேவையற்ற பிரச்சாரம்
தேவையில்லா பணவிரயம்
பசிக்கு சாப்பிட ஏதுமின்றி
பட்டினியில் வாழுது ஒரு கூட்டம்
பணத்துக்காய் பகடையாய் வாழும்
பங்காளிகள் கூட்டம்
மேடைக்கு மேடை
மெய் சிலிர்க்கும் பேச்சு
வாடை கூட இல்லாமல்
அடுத்த மேடையில் இன்னொரு பேச்சு
மூச்சுக்கு முன்னூறு தரம்
முழங்கும் பொய் வார்த்தைகள்
பொய்மெய் அறியா மக்களை
கை மாறி சின்னமிட
கை பைக்குள் காசும்
கள்ள சாராயமும்
வெள்ள வேட்டியும்
வெகுவான சேலையும்
வாக்கு போடும் வரை
வகை வகையாய்
தந்து நிறுத்திடுவர்
இவரும் அவரை போல
இன்னும் எத்தனை காலம் என எண்ணவைத்திடுவர்
சந்தியில் நிறுத்திடுவர்
சத்தமில்லாமல் மறைந்திடுவர்
அடுத்த தேர்தல் வரை
ஷர்ளா தரன்