சந்தம் சிந்தும் கவிதை

ஷர்ளா தரன்

நாடகமேடையில் நடிப்பு
நாட்டுக் கூத்தில் நடிப்பு
திரையில் நடிப்பு
திரைக்கு வருவதற்கு முன்னால்
பலவகை நடிப்பு
இது நாம் அறிந்த நடிப்பு
நானிலம் தெரிந்த நடிப்பு

ஊருக்குள் பலர் நடிப்பு
தாம் உத்தமர்…
ஊர் காத்தவர் என்று
சேற்றுக்குள் நின்றாரலும்
சேரவில்லை விவசாயிக்கு
இன் நடிப்பு…..

கூத்தாடி கொண்ட நடிப்பு
கூழ் குடித்து வயிறு நிரப்ப
கூத்தடிக்கும் நம் கூட்டம்
கூடுது நடிப்பால்
பார்த்து இருக்க பாசாங்கு
பயம் இல்லா பரவசம்
போர்த்திருக்கும் பொய் எல்லாம்
மெய் என்று நம்பும் கூட்டம்
காத்திருக்கும் வினைதனை
கண்டறியார் கூட்டம்
போர்த்திருக்கும் நடிப்பால்
போலியாய் வாழும் கூட்டம்

முகத்துக்கு முன்னால்
முதுகெலும்பு தெரிய சிரிப்பர்
முகம் மறைய முகம் சுழிப்பர்
அகம் குளிர அரவனணப்பர்
ஆற முன் அவதூறாய் பேசுவர்
ஆறுதல் கூற அகம் நாடுவர்
தாம் ஆறுதல் அடைய அனுபவிப்பர்
ஆறாது இன் நடிப்பு
ஆயிரம் ஆண்டு ஆனாலும்
திரைக்கு எட்டாது இன் நடிப்பு
திரையை மிஞ்சிய நடிப்பு….

ஷர்ளா தரன்