சந்தம் சிந்தும் கவிதை

ஷர்ளா தரன்

வசந்தம் உன் வாசலில்
வாழும் வாழ்க்கை நீ்கொண்டால்
கசந்திடாது உள்ளே கூப்பிடு
வசந்தம் அது வரட்டும்

பழஞ்சோத்து கஞ்சியும்
பச்சை மிழகாயும்
பிசைந்து சாப்பிடும் போது….
கடைக்கண்ணில் வரும் கண்ணீரும்
உடைந்து போன வீட்டு ஓடும்
உருகிப்போன உடம்போடும்
கரைந்து ஓடும் நம் வாழ்க்கை
காணாதோ வசந்தம்

தெரிந்து செய்த பிழைகள்
தெரியாமல் செய்த தவறுகள்
தெரிந்தும் தெரியாமல்
விலகிய உறவுகள்
வருந்தும் வேளையிலும்
வாசல் வராதது…
கரைந்து போன நாட்கள்
கண்ட வலி போகுமோ
உடைந்து போன மனதுக்குள்
ஊற்றாய் திரும்பாதோ
வறண்டு போன நிலத்தில்
மழையாய் வசந்தம் வராதோ

இருட்டும் நேரத்தில் கை விளக்கும்
இறுகப் பிடித்த பிள்ளையும்
கடைத் தெரு போகையில்
காலில் கூசும் பாம்பும்
படை நடுங்க வைக்கும்
பாயும் நாய்களின் ஓசையும்
பயந்து கழியும் இந்த வாழ்க்கை
பகலாய் மாறி
மின் ஒளியில் வசந்தம் வராதோ
இந்த்வாழ்க்கை வசந்தமாகதோ

ஷர்ளா தரன்