சந்தம் சிந்தும் கவிதை

ஷர்ளா தரன்

நீண்ட இடைவெளியின் பின்
அனைவருக்கும வணக்கம்

மாசி
முழங்கால் வரை பாய்ந்த வெள்ளம்
கணுக்கால் வரை போய் கரைஒதுங்கிட
மாசிப்பனி அது வந்திடுமே
மூசி் அதன் வீரத்தை காட்ட
பேசவார்த்தை இல்லை
பேசாமல் போகவும் முடியவில்லை

தளிர்த்த அறுகின்மேல்
தத்துருவமாய் வந்தமர்ந்து
பரந்த வெளியில் பஞ்சாய் படர்ந்திருக்கும்
மெல்லிய சூரியக்கதிர் மேனி தடவிட
மெல்லமாய் நழுவி
நல்லவனாய் தரைக்குள் போகும்
நல்ல காலையை இதமாய் தந்திடும்
மகத்தான மாசி அது

மாசிப் பொங்கல்
மாசி மகம்
தைப்பூசம்
பூத்த நெல்லில் இருந்து புதிர் எடுத்து பொங்கல் அதில் பொங்கி
காத்திருந்து கடவுளுக்கு படைத்து
வேர்க்க விறு விறுக்க
வேலை செய்த விவசாயி
வேதனையோடு வேண்டி நிப்பான்
வெகுவான விளைச்சலுக்காய்
தைப்பூசநாளில்
மா பெரும் மாசியில்

ஷர்ளா தரன்