சந்தம் சிந்தும் கவிதை

ஷர்ளா தரன்

மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாது
தேற்றம் காணும் வரை
ஆற்றல் கொண்ட வாழ்வு
ஏற்றம் காணாதோ
மாற்றம் அது வராதோ
மகிழ்வு தனை கண்டிடாதோ

வாட்டி வதைக்கும் வறுமை போக
பட்டினியால் ஒட்டிய வயிறு பெருக
ஓட்டை கூரை ஒழுகாமல் போக
ஓட்டு வீட்டு வாழ்க்கை பெருக
மாற்றம் கண்டு மகிழ்ந்திடாரோ

பள்ளி இன்றி தவிர்க்கும் சிறுவர்கள்
பசிக்காய் வேலை செல்லும் பிஞ்சுகள்
கொஞ்சி விளையாடும் வயசில்
கெஞ்சி பிச்சை கேட்கும் சிறுவர்கள்
அடுத்து என்ன என்று
அஞ்சி வாழும் வாழ்க்கை
மிஞ்சிடாதோ… மிளிராதோ….
மாற்றமே நீ மாறாதே
அற்ரோர் மாறும் வரை…

ஷர்ளா தரன்