சந்தம் சிந்தும் கவிதை

ஷர்ளா தரன்

பாமுகம் பாரா முகம்
ஓரம் காட்டாது ஒன்றாய் சேர்க்கும் முகம்
பாரில் உதித்து பல ஆண்டு கண்ட முகம்
சேருவோரை ஒன்றாய் சேர்க்கும் முகம்
நீ வாழி பல்லாண்டு வாழி

கவிக்கு ஒரு பாதை
கவிதை விரும்பிக்கு ஒரு வளம்
வாரத்துக்கு ஒன்று
வரி வரியாய் தலைப்புகள் கண்டு
மாரி வெள்ளம் போல்
மடையாய் ஓடும் பா
தடுக்கி விழுந்தோரை
தட்டி எழுப்பும் முகம்
பாமுகம் நீ வாழி
பல்லாண்டு வாழி

உதட்டில் தவழ்வதை
ஊரறிய வைக்கும் முகம்
மனதின் எண்ணத்தை
மனங்களில் பதிக்கும் முகம்
கனத்த இதயத்திற்கும்
கனிவுதரும் உன் கவி
பனித் துளி போல்
படரும் உன் கவி
நீ வாழி
பல்லாண்டு வாழி

ஷர்ளா தரன்