„ விரல் நுனியில் அறிவியல் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 25.07.2024
அற்புதம் நிறைந்த இயற்கையின் ரகசியம்
அறிவியல் எனும் அதிசயப் பெட்டகம்
அறிவியல் என்பது அறிவொளி
அகிலமே இதற்குள் அடக்கம்
சூரிய மண்டலம் கடந்து
பால்வெளி அண்டத்திற்குள்
பயணம் தொடர்கிறது இன்று !
உழைத்துக் களைத்த மனிதனுக்கு
உல்லாச வாழ்வினைக் காட்டியது அறிவியல்
வீட்டிற்குள் விரல் நுனிக்குள் அறிவியல்
விரல் நுனியைத் தட்டிவிட்டால்
விந்தையுலகு வந்துவிடும் கைகளுக்குள்
தேடலைத் தேட பாடலைப் பாட
தகவலைப் பரிமாற தகவல் தொடர்பினைப் பேண
ஆய்வுகளை நகர்த்த ஆராட்சிகளைத் தொடர
விரல் நுனிக்குள் வித்தகமாகுது அறிவியல் !
வனப்புண்டு வளர்ச்சியுண்டு
எழிற்சியுண்டு ஏற்றமுண்டு அறிவியலில்
அறிவியல் இயந்திர மானிடமாகி
விந்தை தனைப் புரியுது வியப்பினைத் தருகுது
விரல் நுனியில் அறிவியல் எமக்கு ஆசீர்வாதம்
விழிப்புணர்வு வேண்டும் பயன்பாட்டில்
ஆக்கமும் அழிவும் அறிவியலே !