வியாழன் கவிதை

விரல் நுனியில் அறிவியல்

ஜெயம்

கவி 735

விரல் நுனியில் அறிவியல்

விரல் நுனியில் இயங்கும் உலகம்
இரவென பகலென ஆக்கங்கள் நிகழும்
புதுப்புது நுட்பங்கள் நாளாந்த நுழைவு
புதுமையின் நுழைவுகள் அறிவியல் விளைவு

விலங்கோடு விலங்காக வாழ்ந்தாரே அன்று
நிலவுக்குச் சென்று திரும்புகின்றார் இன்று
அறியாது வாழ்க்கையை காட்டுமிராண்டிகளாய் அந்தக்காலம்
பொறியியல் நெறிமுறைகளை கையாளுகின்றான் இந்தக்காலம்

கடினமான வேலைகளெல்லாம் இயந்திரத்தால் சுலபமானது
படித்தவர்கள் படைப்புக்களால் பளுக்களும் பறந்துபோனது
கையடக்க கருவி விரல்களே விளையாடும்
வையகத்தில் கிட்டத்தட்ட அனைத்துமே கைகூடும்

இருபத்தொராம் நூற்றாண்டில் வாழ்வதும் பாக்கியமே
அருகினிலே தொழில்நுட்பம் கடுமைகளை நீக்கியுமே
புத்திகொண்ட மானிடர் நடமாடும் பூவுலகு
உத்திகளின் மேம்பாட்டால் வாழ்வதென்பது இலகு

ஜெயம்
25-07-2024