வியாழன் கவிதை

விரல் நுணியில் அறிவியல்

கெங்கா ஸ்ரன்லி

ஆன்றோர் அளந்து வைத்த அறிவியல்
இன்று விஞ்ஞான ஆய்வு கண்டுபிடிக்கிறது
அன்று எப்படிக் கண்டுபிடித்தார் இதை
என்றாவது சிந்தித்தோமா முன்பு
உலகின் மையமே நடராஐரின்
பாத நுணிவிரலில் என்றால்
எவ்வளவு நுண்ணறிவு உடையவர்
நம் முன்னோர்கள்
அணுகூட சிறிதென்று
ஓளவை கூறினாரே
இப்பொழுது தானே இவையெல்லாம்
விஞ்ஞான அறிவியலில்
வெளிப்படை யாச்சு
அன்று மெய்ஞானத்துடன் விஞ்ஞானமும்
பின்னிப் பிணைந்திருந்ததால்
அறிவியல் சிறந்து விளங்கியது
இன்றும் இன்னமும் கண்டுபிடிக்கும்
அண்டங்கள் கிரகங்கள்
அன்றே எம்மவர் கூறிய அறிவியலே
ஆக எம் முன்னோரது
அறிவியல் சக்தி அளப்பரியதன்றோ
அதுவே விரல நுணியில் இருந்திருக்கலாமோ!