வியாழன் கவி 2001…
விடுமுறைக் காலம்..
எறும்பாட்டம் உழைத்த மனங்கள்
ஓய்வு கேட்கும் கோடை காலம்
ஊரைச் சுற்றும் வாலிபராட்டம்
பெரிசுகள் கூட உலாக்கோலம்..
நாடு விட்டு நாடேகுதல் சிலரும்
நாட்டுக்குள்ளே விடுமுறை விருப்பும்
அடுக்குப் பண்ணுதல் இளையோருமே
அழகான பயணம் கோடை தன்னிலே..
மழை வந்தும் மந்த கால நிலையும்
மெல்ல விருப்பினை மறைக்க
கோடையில் ஓர் மார்கழியாம்
இது புதுசா இருக்கே பாரீர்..
உறவினரைக் கண்டு உவகை பூண்டு
நிறைவாய்த் தாமே பேசிக் களிக்க
ஊரின் புதினம் உறவின் நெருக்கம்
யாவும் கலக்கும் இக்காலம் தன்னில்
சிவதர்சனி இராகவன்