வியாழன் கவி : “விடியாத இரவொ ன்று ”
14/03/ 2024
இருளோடு இருளாக
இழந்தைவைகளை சுமந்த படி
விடியாத இரவு ஒன்றில்
படகு ஏறி கரை கடந்தேன்
தாய் மண் தவிப்பு நெருப்போடு
இறுதி சமர் காலமதில்
ஒட்டிக்கொண்ட உறவெல்லாம்
சிதறும் படி குண்டு மழை
கூக்குரல் கேட்காத வெடியோசை
விடியாத இரவு ஒன்றில்
உயிர்பிச்சை பெற்ற மகன்
கரை கடந்தான் படகேறி
ஆண்டு பல கடந்தோடி
அழியாத நினைவெல்லாம்
சுமக்கின்றான் விடியாத இரவோடு
விடி வெள்ளி காண்பதற்கு!!!
நன்றி