வியாழன் கவிதை

வாழ்வில் கலையும்….தொடரா நிலையும்

ரஜனி அன்ரன்

“ வாழ்வில் கலையும்….தொடரா நிலையும் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 06.02.2025

வாழ்க்கை என்பது ஓவியம் – அதில்
வண்ணம் தீட்டும் காவியம் கலைகள்
கலையும் வாழ்வும் இணைந்த கூடு
கலையென்பது மனஉணர்வின் வெளிப்பாடு
கலையும் பண்பாடும் எம்மினத்தின் வேர்
கால ஓட்டத்தில் கலைகள் – இன்று
கட்டுக்களை உடைத்து கட்டுமீறிச் செல்கிறதே !

தமிழின் தொன்மைக்குச் சான்றாதாரம்
தமிழர் வாழ்வின் பிரதிவிம்பம்
மனங்களைப் பண்படுத்தும் ஆயுதம்
மயங்க வைக்கும் மாஜா ஜாலம்
பண்பாட்டு ஆழத்தின் உச்சம் கலைகளே !

இன்றைய புலத்து வாழ்வினில்
மரபுக்கலைகள் மறைந்து போச்சு
மாற்றான் கலைகள் மவுசாச்சு
மரபுக்கலையைப் பயில்வோரும்
பவிசுக்காய் அரங்கேற்றம் செய்துவிட்டு
சொகுசுக்காய் வாழுகின்றார் தொடராநிலையோடு !

ஆனாலும் தொடர் ஆண்டாக பாமுகமும்
மண்வளக் கலைகளை மறக்காது
மரபுக்கலைகளைப் பேணியபடி
புலத்து சிறார்களையும் இணைத்தபடி
கலகலப்போடு மேடையேற்றி மகிழுது
தெருவிழாக்களும் பண்டைய கலைகளை
திருவிழாவாக்கி எங்கள் பகுதியில்
தெருவே ஒன்றுகூடி பண்பாடு மாறாது
ஆண்டு தோறும் அரங்கேற்றியும் மகிழுது !